நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பொய்யான அறிக்கைகளை வெளியிட்டதற்காக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவை கண்டனம்

புத்ராஜெயா:

கடந்த இரு வாரங்களில் நாடாளுமன்றத்தில் அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது நாடாளுமன்ற உறுப்பினர்கள்  வெளியிட்ட பொய்யான அறிக்கைகள் குறித்து மக்களவை சபாநாயகரின் அலுவலகத்தை அமைச்சரவை தொடர்பு கொள்ளும்.

நேற்று நடந்த கூட்டத்தில் இத்தகைய நடத்தைக்கு எதிராக அமைச்சரவை உறுதியான கண்டனத்தை தெரிவித்ததாக தகவல் தொடர்பு அமைச்சர் ஃபஹ்மி பட்சில் தெரிவித்தார்.

அமைச்சரவை சபாநாயகர் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் இருப்பதை உறுதிசெய்யும் என்றும் அவர் கூறினார். 

ஏனெனில் முதலில் தவறான  அறிக்கையை வெளியிட்டவர், பின்னர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர் சந்திப்பின் போது அவர் கூறினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிட்ட தவறான அறிக்கைகள், மன்னிப்புக் கேட்கப்படுவதற்கு முன்பு மக்களவையில் குழப்பத்தை ஏற்படுத்தியதாக ஃபஹ்மி கூறினார்.

அவர்களின்  கூற்று  அபத்தம் என்பதனை அவர்கள் உணர்ந்தார்களா என்றும் அதற்கு  ஏதேனும் வருத்தம் இருந்ததா என்பதில் ஒரு சர்ச்சை உள்ளது. 


டத்தோ வான் சைபுல் வான் ஜான், பெங்காலான்  சிப்பா டத்தோ அஹ்மத் மர்சுக் ஷாரி அல்லது மாராங் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் ஆகிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறியது தவறானது என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்களா என்று அவர் வினவினார்.

அடுத்த திங்கட்கிழமை தொடங்கும் அமர்வில் எழுப்பப்பட்ட விவகாரங்களுக்கு அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள்.

செவ்வாயன்று மக்களவையில் பிரதமருக்கு எதிராக அவதுறான அறிக்கை வெளியிட்டதற்காக வான் சைபுல் மன்னிப்பு கேட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset