நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மகா கவிதை நூலின் மகத்துவம் அனைவரையும் சென்றடைய ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்: டத்தோஸ்ரீ இக்பால்

கோலாலம்பூர்:

கவிப்பேரரசு வைரமுத்துவின் மகா கவிதை நூலின் மகத்துவம் அனைவருக்கும் சென்றடைய வேண்டும்.

அதற்கு அப்புத்தகம் ஆங்கிலத்தில் மொழிப் பெயர்க்கப்பட வேண்டும் என்று இஸ்லாமியக் கல்வி வாரியத்தின் தலைவர் டத்தோஸ்ரீ முஹம்மது இக்பால் கூறினார்.

மதிப்புமிகு கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் நூலுக்கு அணிந்துரை  தருமாறு ஓர் அழைப்பு வந்தது. அத்துடன், பன்னிரண்டு பேர்களில் நீங்கள் ஒருவர் என்று கூறப்பட்டது.

ஆழ்வார்கள் பன்னிருவர் என்பது நாம் அறிந்த ஒன்று, எனவே, அந்தத் தகுதி எனக்கு உண்டா என்ற கேள்வி  என் முன்நின்றது.  அதோடு, எண்ணிக்கை  வெறும் கணிதம்தான்! எண்ணம் தான் முக்கியமானது என்ற உணர்வு முந்தியது.   

தமிழ் இலக்கியத்திற்கு, அதுவும் தமிழ் கவிதைக்கும் தற்கால நவீன இலக்கியப் படைப்புகளுக்கு உரியவரும், உலக இலக்கியத்திற்கு தமிழ்ப் படைப்புகளை உயர்த்திக்காட்டிப் பெருமை சேர்த்தவருமான  கவிப்பேரரசு வைரமுத்துவின் நூலுக்கு, அணிந்துரை வழங்க எனக்குத் தகுதி இல்லை என்று கூறி தப்பித்துக் கொள்ள என் மனம் எண்ணியது.

ஆனால், அழைப்பு  டத்தோஸ்ரீ சரவணன் அவர்களின் தூண்டலில் வந்தது என்று  அறிந்ததும், அவரின் ஆளுமைக்கும் அன்புக்கும் மரியாதை தரும் எண்ணத்தில் சற்று தயக்கத்துடன் அழைப்பை ஏற்றுக் கொண்டேன். அதன்  விளைவே உங்கள் முன் நிற்கிறேன்.

கவிப்பேரரசு வைரமுத்துவின் படைப்பான ஐம்பூதங்களை உள்ளடக்கிய, ஐந்து நெடுங்கவிதைகளின் பெருந்தொகுப்பு மகா கவிதை.

இந்த மகா கவிதை நூலுக்கு மலேசியாவில் விழா எடுத்தது இங்குள்ள தமிழர்களுக்கு எல்லாம் பெருமை.

குறிப்பாக மகா கவிதை எனும் மாபெரும் படைப்பிற்கு, அதன் தமிழுக்கு இன்று  விருது வழங்கப்பட்டுள்ளது.

நீண்ட ஆய்வுக்குப் பின் கவிஞர் வைரமுத்து எழுதிய கவிதை நூல் மகா கவிதை. 

நிலம், நீர், தீ, வளி, வெளி என்ற ஐம்பூதங்களின் பிறப்பு இருப்பு சிறப்பு குறித்து விஞ்ஞான ரீதியில் எழுதப்பட்ட பெரும் கவிதை நூல் இது.

இந்த புத்தகத்தின் மகத்துவம் எல்லாரையும் சென்றடைய வேண்டும்.

அதற்கு அந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ய வேண்டும். அப்போது தான் இதன் ஆழமான கருத்துகள் உலகெங்கும் சென்றடையும். இது ஒரு மொழியோடு நின்றுவிடக் கூடாது என்று டத்தோஸ்ரீ இக்பால் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset