நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வைரமுத்துவிற்கு பெருந்தமிழ் விருது வழங்கும் விழா; தமிழுக்காக முன்னெடுக்கப்பட்ட மாபெரும் விழா: டத்தோஸ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு பெருந்தமிழ் விருது வழங்கும் விழா 
தமிழுக்காக முன்னெடுக்கப்பட்ட மாபெரும் விழா.

இவ்விழாவை விமர்சிப்பது அநாகரீகம் என்று மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் கூறினார்.

மலேசிய தமிழ் இலக்கியக் காப்பகமும் தமிழ்ப் பேராயமும் இணைந்து பத்மபூஷன் கவிப்பேரரசு வைரமுத்துவின் மகா கவிதை  நூலுக்கு பெருந்தமிழ் விருது வழங்க வேண்டும் என திட்டமிட்டது.

கிட்டத்தட்ட 12 தமிழ் பேரறிஞர்கள் ஆய்வுக்கு பின் இந்த விருதை வழங்க முடிவு செய்தனர்.

ஆனால், இந்த விழாவிற்கு சில தரப்பிடமிருந்து எதிர்ப்புகள் வந்தது. அந்த எதிர்ப்புகளை மீறி இவ்விழா வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.

குறிப்பாக கவிப்பேரரசு வைரமுத்துக்கு பெருந்தமிழ் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இவ்விழா வெற்றிகரமாக நடந்ததில் மகிழ்ச்சி. அதுவும் மலேசியாவில் அவருக்கு இவ்விருது வழங்கியதில் இரட்டை மகிழ்ச்சி.

அதே வேளையில் இவ்விருது விழா வைரமுத்துவுக்காக நடத்தப்பட்டாலும் அவர் எழுதிய மகா கவிதை என்ற நூலுக்கும் குறிப்பாக தமிழுக்கு நடத்தப்பட்ட மாபெரும் விழாவாகும்.

எத்தனையோ பேர் துன் சாமிவேலுவினால் பயன் பெற்றுள்ளனர். குறிப்பாக தமிழகத்திலிருந்து யார் வந்தாலும், அவர் இலக்கியவாதியாக இருந்தாலும், கலைஞராக இருந்தாலும், நடிகர், நடிகையாக இருந்தாலும் அவரால் பலன் பெற்றோர் ஏராளம் பேர். அவர் அமைச்சராக இருந்தவரை சற்று தள்ளியே இருந்து எந்தவித அனுகூலமும் பெறாதவர் கவிப்பேரரசு மட்டுமே. 

அவர் அமைச்சராக இல்லாத போது எந்தவித எதிர்பார்ப்புமின்றி நட்பு பாராட்டியவர் அவர். அதே போல் அவர் இறப்புக்கு துன் சாமிவேலு அவர்களால் பயன்பெற்ற யாரும் வரவில்லை. ஆனால், கவிப்பேரரசு வைரமுத்து இறப்புக்கு வந்ததோடு இறுதிவரை இருந்து அவருக்கு இரங்கல் தெரிவித்த பண்பாடு மிக்கவர் அவர்.

இந்த விழா தமிழுக்காக எடுக்கப்பட்ட விழாவாகும்.

எத்தனை தடையும் எதிர்ப்புகள் வந்தாலும் தமிழுக்காக முன்னெடுத்த விழா தோற்று போவதில்லை என்பதற்கு இது சிறந்த உதாரணம் என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset