நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இஸ்ரேலிய கப்பலை மலேசியாவிற்குள் அனுமதித்தது துன் மகாதீர் தான்: பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் 

கோலாலம்பூர்: 

2002ஆம் ஆண்டு இஸ்ரேலிய கப்பலை மலேசியாவிற்குள் நுழைய அனுமதித்தது அப்போதைய பிரதமராக இருந்த துன் டாக்டர் மகாதீர் தான்.

இந்த நடவடிக்கைக்கான எந்தவொரு விளக்கமும் முறையாக பொதுமக்களுக்கு வழங்கப்படவில்லை என்று அன்வார் குற்றஞ்சாட்டினார். 

இந்நிலையில், பிரதமர் என்ற முறையில் தாமும் தமது அமைச்சரவையும் இஸ்ரேலிய கப்பல் மலேசியாவிற்குள் நுழைய அனுமதிக்கவில்லை. இதுவே மலேசியாவின் நிலைப்பாடாகும் என்று நிருபர்களிடம் கூறினார். 

கடந்த வாரம், இஸ்ரேல் நாட்டிற்குச் சொந்தமான கப்பல் ஒன்று கிள்ளான் துறைமுகத்தில் உலா வந்ததாக தகவல்கள் வெளியானது.  ZIM ROTTERDAM என்ற பெயர் கொண்ட அக்கப்பல் கிள்ளான் துறைமுகத்திலிருந்து சீனா நாட்டிற்குச் சென்றது. 

இதே கப்பல் நிறுவனம் 2002ஆம் ஆண்டு மலேசியாவிற்கு வரும் போது அதற்கு அனுமதி அளித்தது அப்போதைய துன் டாக்டர் மகாதீர் தலைமையிலான அரசாங்கமாகும் என்று தெரிவித்தார். 

முன்னதாக, எம்.ஏ.சி.சியின் நிகழ்ச்சிக்குப் பிறகு பிரதமர் அன்வார் இப்ராஹிம் மேற்கண்டவாறு சொன்னார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset