நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

தனியார் கிளினிக்குகளில் மருத்துவச் சேவைகளுக்கு RM78.73 மில்லியன் செலவு

ஷா ஆலம்: 

மடானி மருத்துவத் திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறும் பிரிவினருக்கு (பி40) தனியார் கிளினிக்குகளில் மருத்துவச் சேவைகளை வழங்குவதற்காக இதுவரை மொத்தம் 78.73 மில்லியன் ரிங்கிட்டை அரசாங்கம் செலவிட்டது. 

கடந்த 15 ஜூன் 2023 அன்று கோலாலம்பூர், கோம்பாக், உலு லங்காட், பெட்டாலிங், கிள்ளான், ஜோகூர் பாரு, கிந்தா, திமூர் லாவுட், கோத்தா கினாபாலு மற்றும் கூச்சிங் ஆகிய 10 பகுதிகளில் இத்திட்டத்தின் முதல் கட்டம் தொடங்கப்பட்டது என்று சுகாதார அமைச்சர் கூறினார்.

பின்னர் இதன் இரண்டாம் கட்டம் மேலும் 11 பகுதிகளுக்கும், செப்டம்பர் 19-ஆம் தேதி அன்று நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. 

கடந்த காலச் செலவுகளும் தற்போதைய கணிப்புகளின் அடிப்படையிலும், முதல் கட்டமாக 10 மாவட்டங்களில் வாரத்திற்கு 1.7 மில்லியன் ரிங்கிட் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 26-ஆம் தேதி முதல், மடானி மருத்துவத் திட்டம், அரசாங்கத்தின் நிதியுதவியின் நிலைத்தன்மையைக் கணக்கில் எடுத்துக்கொள்வதோடு, இத்திட்டத்தின் செயல்பாட்டை வலுப்படுத்தவும், சீரமைக்கவும் முதல் கட்டத்தில் 10 பகுதிகளில் கவனம் செலுத்துகிறது என டத்தோ ஶ்ரீ டாக்டர் ஜுல்கிப்ளி அஹம்மத் கூறினார்.

மக்களவையில் முதல் கட்டமாக 10 மாவட்டங்களில் மட்டுமே இந்தத் திட்டத்தைத் தொடர்வதற்கான அரசாங்கத்தின் நியாயத்தை அறிய விரும்பிய டத்தோ டாக்டர் அலியாஸ் ரசாக்கின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset