நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

SAUDI ARAMCO திட்டம் தொடர்பாக பெட்ரோனாஸுடன் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்திப்பு நடத்தவிருக்கிறார் 

புத்ராஜெயா:

சவூதி நாட்டைச் சேர்ந்த SAUDI ARAMCO கூட்டு ஒத்துழைப்பின் திட்டம்  காரணமாக தேசிய எண்ணெய் எரிவாயு நிறுவனமான பெட்ரோனாஸ் தரப்புடன் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சந்திப்பு ஒன்றை நடத்தவிருக்கிறார். 

இந்த திட்டம் ஜொகூர் மாநிலத்தின்  PENGERANG INTERGRATED COMPLEX இல் அமையவிருக்கிறது. SAUDI ARAMCO திட்டம் தொடர்பில் பெட்ரோனாஸ் தரப்புடன் ஓரிரு நாட்களில் சந்திப்பு நடத்தி கலந்தாலோசிக்கப்படும். 

அரசாங்க நிலையில் சில விவகாரங்களில் தீர்வு காணப்படும் நோக்கில் இந்த சந்திப்பு நடத்தப்படவிருப்பதாக பிரதமர் அன்வார் கருத்துரைத்தார். 

சவூதியின் சொந்த எண்ணெய், எரிவாயும் நிறுவனமான ARAMCO மலேசியாவில் அதன் கிளையை நிறுவ முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

PENGERANG INTERGRATED COMPLEXயில் அமையவிருக்கும் பெட்ரோலிய கூட்டு ஒத்துழைப்பு என்பது எதிர்காலத்தில் தென்கிழக்காசியாவில் ARAMCO அதன் வர்த்தகத்தை முன்னெடுத்து செல்லும் என்று ARAMCO நிறுவனம் தெரிவித்தது. 

முன்னதாக, நிதியமைச்சரின் மாதாந்திர கூட்டத்தில் கலந்துக்கொண்ட பிறகு பிரதமர் அன்வார் இவ்வாறு தெரிவித்தார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset