நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வங்காளத்தேசத் தொழிலாளர்களை அழைத்து வர முகவர்கள் தேவையில்லை: உள்துறை அமைச்சர் தகவல்

புத்ராஜெயா: 

வங்காளத் தேசத் தொழிலாளர்களுக்கான மலேசிய விசா விண்ணப்பங்களைக் கையாள்வதில் ஈடுபட்டுள்ள முகவர்களின் சேவைகளை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
 
முதலாளிகள் தற்போது குடிநுழைத் துறையின் MYVISA தளத்தின் வாயிலாக நேரடியாக eVisa விண்ணப்பங்களைச் செய்யலாம் என்று உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.  

வங்காளத் தேச ஊழியர்களின் வேலைவாய்ப்புடன் தொடர்புடைய முதலாளிகளுக்கு விசா விண்ணப்பிக்க அரசாங்கம் செயல்பாட்டிலுள்ள கணக்குகள் மற்றும் பயனர் கையேடுகளை வழங்குகிறது என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

மார்ச் 31-ஆம் தேதிக்குப் பிறகு இன்னும் நிரப்பப்படாத வெளிநாட்டு ஊழியர்களின் ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கான அரசாங்கத்தின் முடிவை சைஃபுடின் ஆதரித்தார். 

இந்த ஒதுக்கீட்டின் கீழ், முதலாளிகளுக்கு மார்ச் 31 ஆம் தேதி வரை, விசா அங்கீகரிக்கப்பட்ட பிறகு, இந்தத் தொழிலாளர்களை மலேசியாவிற்கு அழைத்து வரலாம்.

பொது பாதுகாப்பு மற்றும் ஒழுங்கின கூறுகளைக் கருத்தில் கொண்டு உள்துறை மனித வள அமைச்சகமும் இணைந்து இந்த முடிவை எடுத்ததாக அவர் கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை
 

தொடர்புடைய செய்திகள்

+ - reset