நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

போற்றினாலும் தூற்றினாலும் இந்திய சமுதாயத்திற்கான துன் சாமிவேலுவின் தியாகங்களை மறுக்க இயலாது: டத்தோஶ்ரீ சரவணன்

கோலாலம்பூர்:

போற்றினாலும் தூற்றினாலும் இந்திய சமுதாயத்திற்கான துன் சாமிவேலுவின் சேவைகளையும் தியாகங்களை மறுக்க இயலாது என்று மஇகாவின் துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம். சரவணன் கூறினார்.

துன் சாமிவேலுவின் 88ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மஇகா நேதாஜி மண்டபத்தில் அவரின் நினைவலைகள் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வுக்கு தலைமையேற்று அவர் கூறியதாவது,

வேலை நாளில் அரங்கம் நிறைந்த கூட்டத்தைப் பார்க்கும் போது நெகிழ்ச்சியாக உள்ளது.

துன் சாமிவேலு மறைந்த பின்பும் அவரை இத்தனை பேர் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பது நெகிழ்ச்சியாக உள்ளது.

போற்றினாலும் தூற்றினாலும் இந்திய சமுதாயத்திற்கான துன் சாமிவேலுவின் சேவைகளையும் தியாகங்களையும் யாராலும் மறக்க முடியாது. மறுக்க இயலாது என்று அவர் கூறினார்.

கடந்த காலங்களில் ஒருவரின் சேவைகளையும் குணத்தையும் வைத்துத்தான் ஒருவர் நல்லவரா கெட்டவரா என மதிப்பிடுவார்கள்.

ஆனால் இப்போது டிக் டோக் சமூக ஊடகங்களை வைத்துத்தான் எல்லாம் முடிவு செய்யப்படுகிறது.

இந்நிலை மாற வேண்டும். ஒருவர் ஆற்றும் சேவைக்கு உரிய அங்கீகாரம் வாழும் போதே அவருக்கு வழங்கப்பட வேண்டும்.

அவ்வகையில் துன் சாமிவேலு மறைந்தாலும் அவரின் சாதனைகள் இன்னும் அனைவராலும் போற்றப்படுகிறது.

இதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது என்று டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.

துன் சாமிவேலுவின் நினைவேந்தல் நிகழ்வில் மஇகா உதவித் தலைவர்கள் டத்தோ டி. மோகன், டத்தோ முருகையா, டத்தோ அசோஜன், செயலாளர் ஆர்டி ராஜா, பொருளாளர் டான்ஶ்ரீ ராமசாமி, ஶ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான்ஶ்ரீ நடராஜா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset