நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புக்கிட் கமுனிங்கில் மேம்பாட்டுத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட 4 குடும்பங்களுக்குச் சிலாங்கூர் கூ வீடுகள்

ஷாஆலம்:

புக்கிட் கமுனிங்கில் மேம்பாட்டுத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட 4 குடும்பங்களுக்குச் சிலாங்கூர் கூ வீடுகள் வழங்கப்படவுள்ளது.

புக்கிட் கமுனிங்கில் ஜேபிஎஸ்க்கு சொந்தமான நிலத்தில் சுமார் 45 ஆண்டுகளாக சம்பந்தப்பட்ட 4  குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

வெள்ளத் தடுப்புப் பணிகளுக்கு வழிவிடும் வகையில் அங்கிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு  அவர்கள் தள்ளப்பட்டனர்.

இவ்விவகாரம் கோத்தா கமுனிங் சட்டமன்ற உறுப்பினர் எபிரகாஷ்
கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதன் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், சிலாங்கூர் மாநில
வீடமைப்பு மற்றும் சொத்துடைமை வாரியம், மாவட்ட நில அலுவலகம், வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு
உறுப்பினர் அலுவலகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடத்தப்பட்டது.

இந்த சந்திப்புக் கூட்டத்தில் ஷாஆலம் மாநகர் மன்ற உறுப்பினர் யோகேஸ்வரி, கோத்தா கமுனிங் தொகுதி இந்திய சமூகத் தலைவர் மா.நடராஜன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பின் வாயிலாக பண்டார் புத்ரா2இல் 220,000 ரிங்கிட் மதிப்பிலான சிலாங்கூர் கூ வீடுகளை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு விற்கப்படவுள்ளதும்

அந்த வீடுகள் தயாராகும் வரையில் கோத்தா கமுனிங்கில் உள்ள சிலாங்கூர் கூ வீடுகளில் வாடகை அடிப்படையில் தற்காலிகமாகத் தங்கியிருக்கவும் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset