நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஹாடி அவாங்கிற்கு எதிரான விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது

கோலாலம்பூர்:

பாஸ் கட்சியின் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கிற்கு எதிரான 'இஸ்லாமிய மேலாதிக்கம் காக்கப்பட வேண்டும்' என்ற தலைப்பில் பிப்ரவரி 20-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கை தொடர்பான விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்தில் சமர்பிக்கப்பட்டது. 

இந்த வழக்கு தொடர்பான விசாரணை அறிக்கையைக் காவல்துறையினர் நிறைவு செய்துள்ளதாகத் தேசிய காவல்துறை தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹுசைன் தெரிவித்தார்.

கடந்த செவ்வாய்கிழமை ஹாடியின் வாக்குமூலத்தை புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை பதிவு செய்தது.

விசாரணை அறிக்கை நிறைவு செய்யப்பட்டது.

மேல் நடவடிக்கைக்காக விசாரணை அறிக்கை சட்டத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். 

இந்த வழக்கு தொடர்பாகச் சட்டத்துறை தலைவரின் அறிவுறுத்தல்களுக்காகக் காவல்துறை இப்போது காத்திருப்பதாகவும் ரஸாருடின் கூறினார்.

நிந்தனை சட்டம் 1948 மற்றும் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் 1998 இன் பிரிவு 4(1) இன் படி விசாரணை நடத்தப்பட்டது என்றார்.

கடந்த செவ்வாய்கிழமை, ஜலான் ராஜா லாட்டில் உள்ள பாஸ் தலைமையகத்தில் மதியம் 2.19 மணியளவில் அப்துல் ஹாதியின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

-அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset