நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இந்தியா செல்வோம் பிரச்சார திட்டத்தை  இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

கோலாலம்பூர்: 

இந்தியா செல்வோம் எனும் உலகளாவிய புலம் பெயர்ந்தோருக்கான பிரச்சாரத் திட்டத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

நரேந்திர மோடி நேற்று ஜம்மு காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகருக்கு  வருகை மேற்கொண்டார்.

ஜம்மு காஷ்மீருக்கான 800 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும் அறிவித்தார்.

அதே வேளையில் சலோ இந்தியா என்னும் இந்தியா செல்வோம் என்ற பிரச்சாரத்தையும் அவர் தொடக்கி வைத்தார்.

May be an image of one or more people, people smiling, crowd and text that says "AYUSH"

இந்த நிகழ்ச்சியில் சலோஇந்தியா இணையதளத்தையும் (chaloindia.gov.in) பிரதமர் திறந்து வைத்தார்.

இந்திய சுற்றுலா தலங்கள் குறித்து எடுத்துரைத்து, நீங்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 5 வெளிநாட்டினரை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும். 

இதன் மூலம் இந்திய சுற்றுலா வளர்ச்சி அடையும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.

இதனை வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் ஒரு வேண்டுகோளாக முன்வைக்கிறேன் என்று நரேந்திர மோடி கூறினார்.

இந்தியா செல்வோம் பிரச்சாரத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கும் நிகழ்வை இந்திய தூதரகம் ஏற்பாட்டில் பிரிக்பீல்ட்ஸில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாச்சார மையத்தில் நேரலையில் காண்பிக்கப்பட்டது.

May be an image of 1 person, dais and text that says ""CHALO INDIA" BHARAT FRIENDSHIP EXPEDITION March- 12th April 2024 (22 cities 37 ays)"

இந்நிகழ்வில் பேசிய தூதர் பிஎன் ரெட்டி, இந்தியா செல்வோம் பிரச்சாரத்தில் பங்கேற்குமாறு புலம்பெயர்ந்த இந்தியர்களை ஊக்குவித்ததுடன், குறைந்தபட்சம் 5 இந்தியர் அல்லாத நண்பர்களையாவது இந்தியாவுக்குச் செல்வதை ஊக்குவிக்கும் பிரதமரின் தெளிவான அழைப்பை அவர்களுக்கு நினைவூட்டினார்.

நாளை முதல் அடுத்த 35 நாட்களில் இந்தியாவில் உள்ள 22 இடங்களை உள்ளடக்கிய மலேசியா-பாரத் நட்புறவு பயணத்தில் 10 பேர் கொண்ட குழுவை வழிநடத்தும் டத்தோ பிரதீப் குக்ரேஜாவுக்கு தூதர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset