நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நஜீப்பின் தடுப்புக் காவல் இடத்தை மாற்றும் முடிவை அரசு விளக்க வேண்டும்: இஸ்மாயில் சப்ரி

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ரசாக்கின் தடுப்புக் காவலை காஜாங் சிறையிலிருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றுவதற்கான மேல்முறையீட்டில் இணைப்பு உள்ளதா என்பதை அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்.

பெரா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கூப் மக்களவையில் இதனை தெரிவித்தார்.

அரச மன்னிப்பு மேல்முறையீடு செய்யும் போது முன்னாள் பிரதமரை தடுப்புக் காவலுக்கு மாற்றும் வகையில் ஒரு இணைப்பு இருப்பதை நான் உணர்கிறேன்.

காஜாங் சிறையிலிருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்படுவதற்கு அவர் விண்ணப்பிக்க முடியுமா? அது விண்ணப்ப மனுவில் உள்ளதா?

அப்படியானால், இது உண்மையா இல்லையா என்பதுதான் எனது கேள்வி. 

உண்மையாக இருந்தால், மேல்முறையீட்டின் போது அது விவாதிக்கப்பட்டதா, அதன் விளைவு என்ன? என மக்களவையில் அரச ஆணையை நிலைநிறுத்தும் பிரேரணை மீதான விவாதத்தின் போது அவர் கேள்வி எழுப்பினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset