நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புருஸ் கிள்ளியின் சர்ச்சைக்குரிய கருத்து; மலாயாப் பல்கலைக்கழகத்தின் அனைத்துலக, வளமிக்க கல்வியியல் துறை மன்னிப்பு கோரியது 

கோலாலம்பூர்: 

அமெரிக்காவைச் சேர்ந்த புருஸ் கிள்ளியின் சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக மலாயாப் பல்கலைக்கழகத்தின் அனைத்துலக, வளமிக்க கல்வியியல் துறை ஒட்டுமொத்த மலேசியர்களிடமும் மன்னிப்பு கோரியுள்ளது. 

இனிமேல் வெளிநாட்டு பேராசிரியரை அழைக்கும் விவகாரத்தில் முறையான மற்றும் அவர்களின் பின்புலன்கள் தொடர்பாக பகுப்பாய்வு செய்யப்படும் என்று சம்பந்தப்பட்ட கல்வியியல் துறை விளக்கம் அளித்தது. 

கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி பேராசிரியர் புருஸ் கிள்ளி பொறுப்பற்ற முறையில் மலேசியாவைப் பற்றி பேசிய விவகாரம் தொடர்பாக தமது துறை வருத்தத்தைப் பதிவு செய்துக்கொள்வதாக தெரிவித்தது. 

இந்த விவகாரத்தைத் தமது துறையும் பல்கலைக்கழக நிர்வாகமும் கடுமையாக கருதுவதாகவும் நிகழ்ச்சி ஏற்பாட்டு முறையில் இன்னும் பல முன்னேற்றங்கள் ஏற்பட உத்தரவாதம் அளிக்கப்படும் என்று குறிப்பிட்டது. 

பேராசிரியர் புருஸ் கிள்ளியின் சர்ச்சைக்குரிய பேச்சைத் தொடர்ந்து மலாயாப் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த நிகழ்வை உடனடியாக ரத்து செய்யும்படி மலேசிய உயர்க்கல்வி அமைச்சு உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset