நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பாஜகவில் சேர ராஜிநாமா செய்தார் உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜீத் கங்கோபாத்யாய

கொல்கத்தா:

பாஜகவில் சேருவதற்காக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி அபிஜீத் கங்கோபாத்யாய ராஜிநாமா செய்தார். அவர் பாஜகவில் சேர உள்ளதாக அறிவித்துள்ளார்.

2020 ஆண்டு முதல், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாகப் அபிஜீத் கங்கோபாத்யாய  பதவி வகித்தவர். பல்வேறு விவகாரங்களில் இவர் அளித்த தீர்ப்புகள், அந்த மாநிலத்தில் அரசியல் விவாதங்களுக்கு வழிவகுத்தன. அவர் அரசியலில் செல்லலாம் என ஆளும் திரிணமூல் கட்சியினர் விமர்சித்து வந்தனர்.

இந்நிலையில், அவர் நீதிபதி பதவியை செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார். அதற்கான கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு அனுப்பினார்.

பின்னர் அபிஜீத் செய்தியாளர்களிடம் கூறுகையில், திரிணமூல் காங்கிரஸ் பிரமுகர்கள் என்னை தரக்குறைவாகப் பேசி வருகின்றனர். ஒரு தீர்ப்பு அவர்களுக்குப் பிடிக்காவிட்டால், அதற்கு நீதிபதியை வசைபாடுவது சரியல்ல.

அவர்களின் இந்த நடவடிக்கைகள்தான் என்னை அரசியலில் பிரவேசித்து, திரிணமூல் காங்கிரஸுக்கு எதிராக போராட தூண்டியது. மார்ச் 7ம் தேதி பாஜகவில் சேர உள்ளேன். பாஜகவில் சேர அக்கட்சியும் என்னை அணுகியது நானும் அவர்களை அணுகினேன் என்று தெரிவித்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset