நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

SBI மூலம் தேர்தல் பத்திர விவகாரத்தை செயலிழக்க மோடி அரசு முற்படுகிறது: காங்கிரஸ்

புது டெல்லி:

பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் பெற்ற நன்கொடை விவரங்களை பொதுமக்களுக்கு  வெளியிட  உச்சநீதிமன்ற பிறப்பித்த உத்தரவை பாரத ஸ்டேட் வங்கி மூலம் செயலிழக்கச் செய்ய பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு முயற்சிக்கிறது என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியது.

இந்த விவரங்களை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பதற்கான அவகாசத்தை ஜூன் 30 வரை நீட்டிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் எஸ்பிஐ மனு தாக்கல் செய்தது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், பாஜகவின் கஜானாவை நிரப்புவதற்காக ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம், நாடாளுமன்றம் மற்றும் எதிர்க்கட்சிகள் என அனைத்து அமைப்புகளையும் மத்திய அரசு செயலிழக்கச் செய்துள்ளது.

மக்களவையின் பதவிக் காலம் வரும் ஜூன் 16ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தேர்தல் பத்திரங்கள் விநியோகம் குறித்த விவரங்களைச் சமர்ப்பிக்க ஜூன் 30 வரை எஸ்பிஐ கால அவகாசம் கோருகிறது.

இந்த மோசடி தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகம் பலனடைந்தது பாஜகதான். பிரதமர் மோடியின் பெரு நிறுவன நண்பர்களுக்கு நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்டவற்றில் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டதற்கான பிரதிபலன் தேர்தல் நன்கொடை பத்திரங்கள் மூலம் மறைக்கப்பட்டுள்ளதா? என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset