நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டார்

லெபனான்:

லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டார். 

கொல்லப்பட்ட நபர் கேரளத்தைச் சேர்ந்த பட்நிபின் மேக்ஸ்வெல் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவருடன் புஷ் ஜோசப் ஜார்ஜ் மற்றும் பால் மெல்வின் ஆகிய இருவரும் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.   இவர்களும் கேரளத்தைச் சேர்ந்தவர்களே.

இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் இச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்ட தெற்கு காஸாவில், தோட்டங்களில் பணிபுரிந்துகொண்டிருந்தவர்கள் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் இந்திய தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

ஏவுகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த 31 வயதான பட்நிபின் மேக்ஸ்வெல், கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர்.     

தனது கர்ப்பிணி மனைவியையும் 5 வயது குழந்தையையும் பிரிந்து, கடந்த இரு மாதங்களுக்கு முன்புதான் இஸ்ரேல் சென்றுள்ளார் பட்நிபின். அதுவே அவர் தனது குடும்பத்தினரை நேரில் பார்த்த கடைசி நாளாக இருக்கும் என்று அவரின் குடும்பத்தினர் எதிர்பார்க்கவில்லை. 

இது தொடர்பாக பேசிய பட்நிபின் மேக்ஸ்வெல்லின் தந்தை, பாத்ரோஸ் மேக்ஸ்வெல், ''தனது அண்ணனின் வழியைப் பின்பற்றி பட்நிபினும் இஸ்ரேலுக்கு வேலைக்குச் சென்றான். 

இதற்கு முன்பு மஸ்கட், துபையில் வேலை செய்து சொந்த மண்ணுக்குத் திரும்பினான். இங்கு சில நாட்கள் இருந்துவிட்டு, அதன் பிறகே இஸ்ரேலுக்குச் சென்றான். முதலில் என் மூத்த மகன் சென்றான். அவனின் உதவியால் இளைய மகனும் இஸ்ரேலுக்குச் சென்றான். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset