நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உள்ளூர் அரிசி எங்கே போகிறது?: மக்களவையில் மொஹைதின் கேள்வி

கோலாலம்பூர்:

நாட்டில் உள்ளூர் அரிசி எங்கே போகிறது என்று தேசியக் கூட்டணி தலைவர் டான்ஶ்ரீ மொஹைடின் யாசின் மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

மக்கள் எதிர்நோக்கும் அரிசித் தட்டுப்பாடு பிரச்சினையைத் தீர்ப்பதில் அரசாங்கம்  நடவடிக்கை எடுக்காதது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்வ்

அதே பிரச்சினையை தனது நிர்வாகம் எதிர்கொண்டபோது அவர் அதனை எவ்வாறு தீர்த்தார் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

நான் விவசாயம், உள்நாட்டு வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்த காலத்தில் அரிசி தொடர்பான பிரச்சினைகளை நான் சமாளித்து வந்தேன்.

சந்தையில் அரிசி இல்லை என்ற பிரச்சினையையோ அல்லது அரிசியின் விலை அதிகரிப்பையோ நாங்கள் ஒருபோதும் எதிர்கொண்டதில்லை.

அந்த நேரத்தில், அரிசியை பெர்னாஸ் நிர்வகித்தது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இறக்குமதி செய்யப்பட்ட அரிசியை விட உள்ளூர் அரிசி சந்தையில் அதிகமாக இருக்க வேண்டும்.

ஆனால், இப்போது அதற்கு நேர்மாறாக நடக்கிறது.

உள்ளூர் அரிசி எல்லாம் எங்கே போகிறது? இன்று வரை அரசாங்கத்திடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை.

15ஆவது நாடாளுமன்றத்தின் இரண்டாவது தவணையின் முதல் கூட்டத்தின் தொடக்கத்தில் மாட்சிமை தங்கிய மாமன்னரின் அரச ஆணை மீதான விவாதத்தின் போது அவர் இவ்வாறு கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset