நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

எம்பி, எம்எல்ஏக்கள் லஞ்சம் பெறுவதற்கு சட்ட பாதுகாப்பு கிடையாது: உச்சநீதிமன்றம்

புது டெல்லி:

நாடாளுமன்றம், பேரவைகளில் வாக்களிக்க, பேச உறுப்பினர்கள் லஞ்சம் பெறுவதற்கு சட்டப்பாதுகாப்பு கிடையாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளித்தது.

இதுதொடர்பாக முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் ஆட்சியின்போது உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை 25 ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் ஏழு நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியுள்ளது.

மேலும், நாடாளுமன்றம், பேரவை உறுப்பினர்கள் லஞ்சம் வாங்குவதும் ஊழலில் ஈடுபடுவதும் இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையை சிதைத்துவிடும்; உறுப்பினர்கள் லஞ்சம் பெறுவது, நாடாளுமன்ற சிறப்புரிமைகளின்கீழ் பாதுகாக்கப்பட்டதல்ல என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

135 பக்கங்கள் கொண்ட தற்போதைய தீர்ப்பை, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் எழுதியுள்ளார். அதல், அவையில் விவாதங்களும் ஆலோசனைகளும் சுதந்திரமாக, அச்சமின்றி நடைபெறும் சூழலை உருவாக்குவதே மேற்கண்ட சட்டப் பிரிவுகளின் நோக்கம். ஆனால், அவையில் வாக்களிக்கவோ, குறிப்பிட்ட விஷயத்தை பேசவோ லஞ்சம் பெறப்படுமானால், அந்த நோக்கமே சிதைந்துவிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset