நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

வான் சைபுலை 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை ஜாஹிட் வாபஸ் பெற்றார்

கோலாலம்பூர்: 

பிரதமர் அன்வார் இப்ராஹிம் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்த தலைவர் என்று குற்றம் சாட்டியதற்காக வான் சைபுல் வான் ஜானை ஆறு மாதங்களுக்கு இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தைத் துணைப் பிரதமர் ஜாஹிட் ஹமிடி வாபஸ் பெற்றார்.

கடந்த வாரம் தனது உரை குறித்து வான் சைபுல் விளக்கமளிக்க சபாநாயகர் ஜோஹாரி அப்துல் அவகாசம் அளித்ததை அடுத்து ஜாஹிட் அந்தத் தீர்மானத்தை வாபஸ் பெற்றார்.

வான் சைஃபுல் தாம் பிரதமரைக் குறித்துப் பேசியதாகவும் மறுநாள் பிரதமரிடமும் மான்னரிடமும் மன்னிப்புக் கேட்டதாகவும் கூறினார். 

இந்த மன்னிப்பு பரிசீலிக்கப்பட வேண்டும் என்று தாம் கேட்டுக் கொள்வதாகவும் வான் சைபுல் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

இதனையடுத்து, துணைப் பிரதமர் ஜாஹிட் ஹமிடி வான் சைபுல் மீதான தீர்மானத்தை வாபஸ் பெற்றார்.

பிப்ரவரி 28 அன்று அரச ஆணையை நிலைநிறுத்துவதற்கான பிரேரணை மீதான விவாதத்தின் போது, ​​பெர்சத்து தலைவர் பிரதமர் அன்வார் இப்ராஹம் தனது அதிகாரத்தைத் துஷ்பிரயோகம் செய்த தலைவர் என்று குற்றம் சாட்டினார். 

எதிர்காலத்தில் இது போன்று நடக்காமல் இருக்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்தச் சம்பவத்தை ஒரு பாடமாகப் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பாயா பெசார் நாடாளுமன்ற உறுப்பினர் ஷஹர் அப்துல்லா கூறினார்.

ஜோஹாரி, அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி பிரதிநிதிகளைப் பிரச்சனையிலிருந்து விலகி, விவாதத்தில் மக்கள் பிரச்சனைகளுக்கு தொடர்ந்து முன்னுரிமை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset