நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

இலங்கையில் இன்று நள்ளிரவு முதல் மின் கட்டணம் குறைகிறது 

கொழும்பு:

30 யூனிட்டுக்கும் குறைவான மின் பாவனையாளர்களுக்கு யூனிட் ஒன்றிற்கு தற்போது விதிக்கப்படும் 12 ரூபாய் 8 ரூபாயாக குறைக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

31 முதல் 60 யூனிட்டுகளுக்கு இடைப்பட்ட மின் நுகர்வோருக்கு 28 சதவீதம் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், 61 முதல் 90 யூனிட் வரையிலான மின் நுகர்வோருக்கான மின் கட்டணம் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 91 முதல் 180 அலகுகளுக்கு இடைப்பட்ட மின் பாவனையாளர்களுக்கான மின்சாரக் கட்டணம் 24 வீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

180 யூனிட்டுக்கு மேல் உள்ள வீட்டு வாடிக்கையாளர்களுக்கு 18 சதவீதம் மின்சார கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

வழிபாட்டுத் தலங்களுக்கு 33 சதவீதமும், ஹோட்டல், தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் 18 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது. 

நிஹார் தய்யூப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset