நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஏபிஎம்எம் ஹெலிகாப்டர் கடலில் விழுந்து நொறுங்கியது

பெட்டாலிங் ஜெயா:

மலேசியக் கடற்படை அமலாக்கப் பிரிவு (ஏபிஎம்எம்)-க்குச் சொந்தமான AW139 ஹெலிகாப்டர் இன்று காலை  கோலா சிலாங்கூர், அங்சா தீவு அருகே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. 

காலை 10 மணியளவில் பொதுமக்களிடமிருந்து இந்த சம்பவம் தொடர்பாக அவசர அழைப்பு வந்ததாக சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் தெரிவித்தார். 

இந்த விபத்தில் விமானி உட்பட 4 பயணிகளையும் மீனவர் காப்பாற்றியதாகவும் தற்போது அவர்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளான் அருகே மலேசியக் கடற்பரப்பில் ஹெலிகாப்டர் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.

எனினும், விபத்துக்கான காரணம் குறித்து இன்னும் தெரிவிக்கப்படவில்லை.

சம்பந்தப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் அதிகாரிகளுக்கும் உதவப் பாதுகாப்புக் குழு இப்போது சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளது.

மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையமும் இந்தச் சம்பவத்தை உறுதிப்படுத்தியதுடன், இது குறித்து ஓர் அறிக்கையை வெளியிடும்.

அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடுவதற்கு முன்பு, சம்பவம் தொடர்பான தகவல்களைச் சேகரிப்பதற்கான இறுதிக் கட்டத்தில் தமது தரப்பு ஈடுப்பட்டிருப்பதாக மலேசிய விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரி நோராஸ்மான் மஹ்மூத் தெரிவித்தார். 

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset