நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

இணைய ஊடகங்களுக்கான அட்டை ஆறு மாதங்கள் மட்டுமே செல்லுபடியாகும் 

பெட்டாலிங் ஜெயா:

பல இணைய ஊடகங்களுக்குத் தகவல் துறை ஆறு மாதம் செல்லுபடியாகும் ஊடக அட்டைகளை வழங்கியுள்ளது.

சில இணைய ஊடக செய்தியாளர்கள் ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் ஊடக அட்டையைப் பெறுகின்றனர். இன்னும் சிலருக்கு ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் அட்டைகள் வழங்கப்படுகின்றன.

இதற்கு முன் ஊடக அட்டைகள் இரண்டு வருட செல்லுபடியாகும். தற்போது இது குறைக்கப்படவுள்ளது.

இது தகவல் துறையின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கொள்கைக்கு முரணானது.

இந்த ஆண்டு முதல் ஊடக அட்டைகளைப் புதுப்பிக்க அல்லது புதியதாக விண்ணப்பிக்கும் இணைய ஊடச் செய்தியாளுக்கு ஆறு மாதம் செல்லுபடியாகும் அட்டைகள் வழங்கப்படுகின்றன. 

இந்தச் செயல்முறை பல்வேறு இணைய ஊடக நிறுவனங்களின் ஒப்பந்தம் மற்றும் நிரந்தர ஊழியர்களைப் பாதிக்கின்றது.

இருப்பினும், ஒரு மதிப்பாய்வின் அடிப்படையில், அதே காலகட்டத்தில் விண்ணப்பித்த அச்சு ஊடக ஊடகவியலாளர்கள் இரண்டு வருட செல்லுபடியாகும் காலத்துடன் கூடிய ஊடக அட்டை வழங்கப்படுகின்றது.

2018-ஆம் ஆண்டிலிருந்து செயல்படத் தொடங்கிய Twentytwo13 என்ற இணைய ஊடகத்தில் பணிப்புரியும் செய்தியாளர்களுக்கு ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் அட்டையை வழங்கப்படுகிறது. 

தங்களின் சமீபத்திய ஊடக அட்டை ஆறு மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். இதற்கு முன் இரண்டு வருடங்கள் செல்லுபடியாகும் அட்டை வழங்கப்பட்டதாகவும் என்று Twentytwo13-யின் பத்திரிக்கை ஆசிரியர் ஹரேஷ் கூறினார்.

இது குறித்துத் தகவல் துறையின் தலைமை இயக்குநரைச் சந்திக்க உத்தேசித்துள்ளதாகவும் விரைவில் அவரிடமிருந்து விளக்கம் பெறுவோம் என்று தெரிவித்தார். 

இந்த விடயம் தொடர்பில் தொடர்பு கொண்ட தகவல் துறையின் ஊடக மற்றும் தொடர்பாடல் பிரிவின் இயக்குநர் இ.சிவபாலன் இவ்விடயம் தொடர்பில் ஊடக அறிக்கையொன்றை வெளியிட தமக்கு அதிகாரம் இல்லை எனத் தெரிவித்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset