நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாடாளுமன்றத் தவணை நிலைக்கான சட்டத்தை இயற்றுவதற்கான முன்மொழிவு இன்னும் ஆய்விலுள்ளது

பெட்டாலிங் ஜெயா:

நாடாளளுமன்றத் தவணை நிலைக்கான சட்டத்தை இயற்றுவதற்கான முன்மொழிவு இன்னும் விரிவான ஆய்வு நிலையில் இருப்பதாக பிரதமர் துறையின் சட்ட மற்றும் நிறுவன சீர்திருத்தம் அமைச்சர் டத்தோஸ்ரீ அசாலினா ஓத்மான் சைட் தெரிவித்துள்ளார். 

பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு மேற்கொண்ட ஆய்வில், இந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாக முக்கியமான சிலர் மற்றும் பொதுமக்களுடனான அமர்வுகளின் முடிவுகளின் கருத்துக்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். 

இந்த விரிவான ஆய்வின் முடிவுகள் எதிர்காலத்தில் அமைச்சரவையின் கொள்கை பரிசீலனைக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

மலேசியாவில் அரசியல் ஸ்திரத்தன்மைக்குக் கலங்கம் விளைவிக்க கூடிய கட்சித் தாவல்களைத் தடுக்கவும் நாடாளுமன்றத் தவணை நிலைக்கான சட்டத்தை இயற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதா என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ராயர் எழுப்பிய கேள்விக்கு அசாலினா மேற்கண்டவாறு பதிலளித்தார். 

மேலும் கருத்து தெரிவித்த அவர், அரசியல் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும், நாட்டின் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புக்குத் தீங்கு விளைவிக்கும் அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியைத் தடுக்கவும் பல நாடுகள் உறுதியான காலக்கெடுவுடன் தேர்தல்களை நடத்துகின்றன.

கூடுதலாக, நாடாளுமன்றத் தவணை நிலைக்கான சட்டம் அனைத்துச் சீர்திருத்த நிகழ்ச்சி நிரல்களையும் கொள்கைகளையும் இடையூறு இன்றி தொடர்ந்து செயல்படுத்துவதை உறுதி செய்ய முடியும் என்று அசாலினா கூறினார்.

மலேசியாவில் நாடாளுமன்றத்தின் தவணை நிலையானது கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 55(3) இன் கீழ் வழங்கப்பட்டுள்ளபடி ஐந்து ஆண்டுகள் ஆகும்.

இருப்பினும், எந்தக் காரணத்திற்காகவும் ஐந்தாண்டு காலம் முடிவதற்குள் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஒப்புதல் அளிக்குமாறு மாமன்னரைக் கோருவதற்கு பிரதமருக்கு விருப்புரிமை உள்ளது என்றார். 

இதற்கிடையில், முன்மொழியப்பட்ட சட்டத்தை ஆராய்வதில் அரசாங்கத்தின் சவால்கள் தொடர்பான தனியான பதிலில், அசாலினா, தற்போதைக்கு, அது இன்னும் விரிவான ஆய்வு கட்டத்தில் இருப்பதால் எந்தச் சவால்களும் அடையாளம் காணப்படவில்லை என்றார்வ்

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset