நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஸ்பெயின் பெண்ணின் அழுகுரல் மோடியின் காதுகளில் கேட்கவில்லையா; இது இந்திய தேசத்தின் அவமானம்: மனோ தங்கராஜ்  

புதுடில்லி:

66 நாடுகளை மகிழ்ச்சியுடன் கடந்த தம்பதியர், வட இந்தியாவில் 7 பேரால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டபோது, எழுப்பிய அழுகுரல் மோடியின் காதுகளில் கேட்கவில்லையா? என பிரதமர் மோடியிடம், அமைச்சர் மனோ தங்கராஜ் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த தம்பதி, இந்தியாவில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள வந்துள்ளனர். 

ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சி நகரில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தும்கா மாவட்டத்தில் குறுமுகத் என்ற பகுதிக்கு இருவரும் சுற்றுலா சென்றனர். 

அங்கு இரவு தற்காலிக கூடாரம் அமைத்து இருவரும் தங்கியிருந்தனர். நள்ளிரவில் அங்கு சென்ற 7 பேர் கொண்ட கும்பல், கணவரை அடித்து காயப்படுத்தி விட்டு, இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.

தகவல் அறிந்து அங்கு சென்ற போலீஸார், இருவரையும் மீட்டு தும்கா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அங்கு பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரப்படுகிறது. இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டதாக 3 பேரை கைது செய்துள்ளதாகவும், மீதமிருக்கும் நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில், வெளிநாட்டு தம்பதிக்கு ஏற்பட்ட இந்த கொடூர சம்பவத்தை தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டித்துள்ளா். 

இதுகுறித்து வெளிநாட்டு தம்பதி வேதனையுடன் பேசும் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 

மேலும், 66 நாடுகளை மகிழ்ச்சியுடன் கடந்த தம்பதியர் வட இந்தியாவில் 7 பேரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டபோது எழுப்பிய அழுகுரல் மோடியின் காதுகளில் கேட்கவில்லையா?. 

இது தேசத்தின் அவமானம். இந்த காட்டுமிராண்டி செயல்தான் பிரதமர் மோடி பேசும் கலாச்சார பெருமையா? என்று காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset