நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காஷ்மீரிகள், பாலஸ்தீனர்களின் சுதந்திரத்துக்காக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம்: பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப்

இஸ்லாமாபாத்: 

பாகிஸ்தானின் பிரதமராக 2ஆவது முறையாக தேர்வாகி உள்ள ஷாபாஸ் ஷெரீஃப், காஷ்மீரிகள், பாலஸ்தீனர்களின் சுதந்திரத்துக்காக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறப்படும் என்றார்.

நாடாளுமன்றக் கூட்டத்தில், பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மொத்தம் உள்ள 336 உறுப்பினர்களில் ஷாபாஸ் ஷெரீஃபுக்கு ஆதரவாக 201 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஒமர் அயூப் கானுக்கு ஆதரவாக 92 வாக்குகள் கிடைத்தன.

பெரும்பான்மைக்கு தேவைப்படும் வாக்குகளைவிட ஷாபாஸ் ஷெரீஃப் 32 வாக்குகள் அதிகமாக அவரை 24வது பிரதமராக  தேர்வு செய்யப்பட்டார்.

ஷாபாஸ் ஷெரீஃப் பிரமராகப் பதவியேற்கும் நிகழ்ச்சி அதிபர் மாளிகையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

பின்னர் நாடாளுமன்றத்தில் பேசிய அவர்,
காஷ்மீரிகள், பாலஸ்தீனர்களின் சுதந்திரத்துக்காக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset