நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மேற்கு வங்க பாஜக வேட்பாளர் திடீர் விலகல்

புது டெல்லி: 

மேற்கு வங்க பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட போஜ்புரி நடிகர் பவன் சிங், தேர்தல் போட்டியில் இருந்து என விலகினார்.

195 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை பாஜக அறிவித்தது.  இதில் மேற்கு வங்கம் மாநிலத்தின் ஆசன்சோல் தொகுதி பாஜக வேட்பாளராக போஜ்புரி பாடகரும் நடிகருமான பவன் சிங் அறிவிக்கப்பட்டார்.

ஆனால் அவர் போட்டியிடப்போவதில்லை என்று அறிவித்தார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், சில காரணங்களால் ஆசன்சோல் தொகுதியில் என்னால் போட்டியிட இயலாது. இந்த முடிவுக்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை.

பவன் சிங் தன்னுடைய திரைப்படப் பாடல்களில் பெண்களை பல்வேறு வகையில் ஆபாசமாகச் சித்தரித்திருக்கும் விடியோக்கள் இணையத்தில் வைரலாகின.

இதனை திரிணமூல் காங்கிரஸ் கடுமையாக விமர்சித்தது.
இந்தச் சர்சையைத் தொடர்ந்து பவன் சிங்கை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகுமாறு பாஜக தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset