நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

வாகன உற்பத்திக்கான லேத்தை ஏவுகணை என்று இந்தியா பொய் சொல்லி பறிமுதல்: பாகிஸ்தான் குற்றச்சாட்டு

இஸ்லாமாபாத்: 

பாகிஸ்தானுக்கு கப்பல் மூலம் கொண்டு வரப்பட்ட வாகன உற்பத்திக்கான லேத் இயந்திரத்தை இந்தியா பொய்யான காரணம் கூறி பறிமுதல் செய்துள்ளது என அந்த நாடு குற்றம்சாட்டியுள்ளது.  

சீனாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி நோக்கி வந்த சரக்குக் கப்பலில் அணுசக்தி திட்ட ஏவுகணை தயாரிப்புக்கு பயன்படுத்தக் கூடியதாக இயந்திரம் உள்ளதாக கூறி மும்பை துறைமுகத்தில் இந்தியா நிறுத்தி பறிமுதல் செய்தது.

இந்தியாவின் இந்த நடவடிக்கை நியாயமற்றது என்று பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறுகையில், பாகிஸ்தானின் வாகன உற்பத்தி துறைக்கு உதிரி பாகங்களை விநியோகிக்கும் ஒரு நிறுவனத்தால் இறக்குமதி செய்யப்பட்ட வர்த்தக லேத் இயந்திரத்தை இந்தியா பொய் சொல்லி பறிமுதல் செய்துள்ளது.

இந்த இறக்குமதிக்கான அனைத்து பரிவர்த்தனைகளும் வங்கி வழிமுறைகளின் மூலம் வெளிப்படையாக நடைபெற்றுள்ளன.

இந்தியாவின் பறிமுதல் நடவடிக்கை சர்வதேச சட்டங்களுக்கு எதிரானது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset