நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

WTO மாநாட்டில் இந்தியாவுக்கு எதிராக கருத்து: தாய்லாந்து தூதர் நீக்கம்

அபுதாபி:

உலக வர்த்தக அமைப்பு WTO மாநாட்டில் இந்தியாவுக்கு எதிராக கருத்து தெரிவித்த தூதரை அப் பதவியில் இருந்து தாய்லாந்து அரசு நீக்கியது.

WTO அமைச்சர்கள் மத்தியில் நடைபெற்ற கூட்டம் அபுதாபியில்  நடைபெற்றது. இதில் தாய்லாந்து நாட்டின் தூதர் பிம்சனாக் வோன்கொர்போன், அரிசி ஏற்றுமதி சந்தையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே குறைந்தபட்ச ஆதரவு விலை என்ற பெயரில் விவசாயிகளிடம் இருந்து இந்திய அரசு அரிசியை கொள்முதல் செய்கிறது என்றார்.

இதற்கு இந்திய எதிர்ப்பை தாய்லாந்து அரசு மற்றும் உலக வர்த்தக அமைப்பின் தலைவர், அமைப்பின் வேளாண் குழு தலைவராக உள்ள கென்யா, ஐக்கிய அரபு அமீரகத்திடம் தெரிவித்தது.

India strongly objects to Thai envoy's remarks at WTO meet in Abu Dhabi:  Reports - Business & Economy News

ஆலோசனை கூட்டங்களில் தாய்லாந்து பிரதிநிதிகள் பங்கேற்ற அமர்விலும் இந்தியா பங்கேற்காமல் தவிர்த்தது.

இந்நிலையில், உலக வர்த்தக அமைப்புக்கான தாய்லாந்தின் தூதர் பிம்சனாக்கை அப்பொறுப்பில் இருந்து நீக்குவதாக தாய்லாந்து அரசு அறிவித்ததுள்ளது.

இந்தியாவின் அரிசி கொள்முதல் திட்டம் குறித்து அபத்தமான கருத்தை தெரிவித்ததற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரது பேச்சும், செயல்பாடுகளும் முறையாக இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset