நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பதஞ்சலி விளம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்

புது டெல்லி:

ஆங்கில மருத்துவ முறைக்கு எதிராக தவறான விளம்பரங்களை வெளியிட்டு வரும் யோகா குரு பாபா ராம்தேவுக்குச் சொந்தமான பதஞ்சலி நிறுவனத்துக்கு உச்ச நீதிமன்றம்  எச்சரிக்கை விடுத்தது.

ஏற்கெனவே அளித்துள்ள உத்தரவாதத்தை மீறியுள்ள நிலையில், ஏன் பதஞ்சலி நிறுவனத்தின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடரக் கூடாது' என்றும் அதன் நிர்வாக இயக்குநரிடம் உச்சநீதிமன்றம் கேள்வியும் எழுப்பியது.

பதஞ்சலி நிறுவனம் டூத்பேஸ்ட், சோப்பு, தேன், ஷாம்பு உள்ளிட்ட பொருள்களை விற்பனை செய்து வருகிறது. இந்தப் பொருள்களை பிரபலப்படுத்த அந்நிறுவனம் செய்யும் விளம்பரங்களில் ஆயுர்வேத பொருள்கள், மற்ற மருத்துவ முறைகளால் குணப்படுத்த முடியாத நோய்களையும் குணப்படுத்தும் என்று கூறப்பட்டது.

Baba Ramdev: Amit Shah meets Baba Ramdev as part of BJP's outreach exercise

இந்த விளம்பரத்தை எதிர்த்து, இந்திய மருத்துவச் சங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விசாரித்த உச்ச நீதிமன்றம், தவறான விளம்பரங்கள் குறித்து பதஞ்சலி நிறுவனத்தை எச்சரித்தது.

அதன் பிறகும் அந்த விளம்பரங்களை வெளியிட்டு வந்த அந்த நிறுவனம், பதஞ்சலியின் ஆயுர்வேத பொரள்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவச் சான்றுகளும் உள்ளன' என்று பாபா ராம்தேவ் கூறினார்.

ஆளும் பாஜகவின் அதிகார வர்க்கத்தின் உதவியால் தொடர்ந்து இதுபோன்ற பொய்யான விளம்பரங்களை தந்து வருகின்றார் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset