நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

30 ஆயிரத்தை தாண்டிய காசா பலி: நெஞ்சை பதற வைக்கும் உயிரிழந்தவர்களின் விவரம்

காசா சிட்டி:

காசாவில் கடந்த 5 மாதங்களாக இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இதில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் என்பது நெஞ்சை பதற வைக்கிறது.

இது குறித்து அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

இத்துடன், இந்தப் பகுதியில் இஸ்ரேல் படையினர் கடந்த அக். 7 முதல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,035ஆக அதிகரித்துள்ளது. இஸ்ரேல் குண்டுவீச்சில் இதுவரை 70,457 பேர் காயமடைந்துள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More Israeli attacks, more death and destruction in Gaza | Israel War on  Gaza News | Al Jazeera

இந்தப் போரில் ஹமாஸ் போராளிகள்  12,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக இஸ்ரேல் அரசும், 6000 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பும் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை:
சிறுவர்கள் - 12,660+
பெண்கள் - 8,570+
முதியவர்கள் - 1,049
மருத்துவப் பணியாளர்கள் - 340
ஐ.நா. ஊழியர்கள் - 152
செய்தியாளர்கள் - 200+

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset