நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பெங்களூருவில் குண்டுவெடிப்பு: பயங்கரவாதிகளின் சதியா?

பெங்களூரு:

பெங்களூரு நகருக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உளவுத்துறையினர் அடிக்கடி எச்சரித்து வருகிறார்கள். 

மத்திய அரசின் இந்த எச்சரிக்கை காரணமாக பெங்களூருவில் எப்போதும் போலீசார் விழிப்பு நிலையில் இருந்து வருகின்றனர்.

தேசிய புலனாய்வு முகமை,  மத்திய குற்றப்பிரிவு போலீசார் பெங்களூரு நகரில் அடிக்கடி சோதனை நடத்தி, ஆங்காங்கே பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை கைது செய்து வருகின்றனர்.

இத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், பெங்களூரு நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் அடுத்தடுத்து 2 வெடிகுண்டுகள் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளியில் ராமேஸ்வரம் கபே என்ற பெயரில் ஓட்டல் செயல்பட்டு வருகிறது.

அந்த ஓட்டலில் நேற்று மதியம் 1 மணியளவில் 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தனர்.

அப்போது ஹோட்டலில் 2 முறை வெடிகுண்டுகள் வெடித்து சிதறின.

இதனால் ஓட்டல் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. ஓட்டலில் இருந்த கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

ஓட்டலில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்கள், குண்டுகள் வெடித்ததும் அதிர்ச்சியில் உறைந்தனர். பின் ஹோட்டலில் இருந்து வெளியே ஓடினர்.

குண்டுகள் வெடித்த சம்பவத்தில் ஒரு பெண், ஓட்டல் ஊழியர்கள் உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் குறித்த வீடியோ பதிவுகள் சமூக வலைத் தளங்களில் வைரலாகி உள்ளது.

முதல் கட்ட விசாரணையில் எரிவாயு தோம்பு வெடித்து சிதறி இருப்பதாக தகவல் பரவியது.

ஆனால் போலீசார் நடத்திய விசாரணையில், கை கழுவும் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த ஒரு  பையில் வைத்திருந்த வெடிகுண்டுகள் தான் பலத்த சத்தத்துடன் வெடித்து சிதறி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset