நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

திறன்களை உயர்த்துவதற்கான புதிய பயிற்சித் திட்டங்களுக்கு ஒரு மாத காலக்கெடு: பிரதமர்

ஷாஆலம்:

திறமையான பணியாளர்களை உருவாக்குவதற்கான திறன்களை மேம்படுத்துவதற்கான புதிய பயிற்சி திட்டங்களை உருவாக்க வேண்டும்.

இதற்கு சொக்சோவுக்கும் மனிதவள அமைச்சுக்கும் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

மலேசியத் தொழிலாளர்களின் திறன்களை அனைத்து வகையிலும் மேம்படுத்த வேண்டும்.

குறிப்பாக தொழில்துறை நிறுவனங்களின் அதிக தேவை உள்ள பகுதிகளில், அதிநவீன வேலை சந்தையில் நாடு போட்டியிடுவதற்கு உதவும்.

முன்பு செய்ததை விட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மேம்பாட்டு பயிற்சி திட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவை சமர்ப்பிக்க வேண்டும்.

இதற்கு சொக்சோவுக்கும் மனிதவள அமைச்சுக்கும் ஒரு மாதம் அவகாசம் தருகிறேன்.

மனிதவளத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் இந்த திட்டத்தை அமைச்சரவையின் பரிசீலனை, ஒப்புதலுக்காக முன்வைப்பார் என்று எதிர்பார்க்கிறேன்.

ஷாஆலமில் வேலை வாய்ப்பு கண்காட்சியை தொடக்கி வைத்த பிரதமர் இவ்வாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset