நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மதத்தின் மீது சவாரி செய்வதை நிறுத்துங்கள்: அரசியல் தலைவர்களுக்கு ஜாஹித் அறிவுறுத்து

புத்ராஜெயா:

சிலாங்கூர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா நேற்று பாஸ் தலைவர் ஹாடி அவாங்கிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஆகையால் அரசியல் லட்சியங்களை அடைய மதத்தின் மீது சவாரி செய்ய வேண்டாம் என்று துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஜாஹித் ஹமிடி அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் நினைவூட்டினார்.

கருத்துகளை தெரிவிப்பதில் மதம், சட்டம், ஃபாத்வா போன்ற விஷயங்களை எல்லைகளாகப் பயன்படுத்த வேண்டும்.

அதை பின்பற்றும் மதப் பின்னணி கொண்ட எந்தக் கட்சித் தலைவருக்கும் நான் அறிவுரை கூறத் தேவையில்லை.

ஆனால் அரசியல் லட்சியங்களை அடைய மதத்தை ஒரு வாகனமாகப் பயன்படுத்த வேண்டாம்.

இந்த உத்தரவை அந்த நபருக்கு மட்டுமல்ல.

அம்னோ உள்ளிட்ட கட்சித் தலைவர்களுக்கும் ஒரே மாதிரியான செயல்களையும் தவறுகளையும் செய்ய வேண்டாம் என்று என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset