நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பெர்சி பேரணி அற்பத்தனமானது: கைரி, ஷாரில் சாடல்

கோலாலம்பூர்:

100 சதவீத சீர்திருத்தங்களைக் கோரி செவ்வாயன்று பெர்சே நடத்திய பேரணி அற்பத்தனமானது.

அம்னோவின் முன்னாள் தலைவர்களான கைரி ஜமாலுடின், ஷாரில் ஆகியோர் இவ்வாறு சாடினர்.

தேர்தல் சீர்திருத்தக் குழு நாடாளுமன்றத்தை நோக்கி சென்றதை நான் பார்த்தேன்.

அக் குழுவினர் நம்பிக்கை கூட்டணியுடன் நெருங்கிய உறவுகளின் காரணமாக இது நடந்துள்ளது.

பெர்சேவில் உள்ள அனைவரும் நம்பிக்கை கூட்டணியின் நண்பர்களாவர்.

அவர்கள் அரசாங்கத்துடன் நண்பர்களாக இருப்பதால் இது அற்பமானது.

இறுதியில் அவர்கள் நம்பிக்கை கூட்டணியை ஆதரிப்பாளர்கள்.

உண்மையில் பெர்சே இன்னும் இருக்கிறது என்பதற்காக இந்த பேரணி நடத்தப்பட்டது என்று அவர்  கெலுவார் செகஜாப் போட்காஸ்டில் பேசிய கைரி கூறினார்.

அரசாங்கம் அரசியல் சீர்திருத்தங்களை மேற்கொள்ளக் கோரி நாடாளுமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற பேரணியில் சுமார் 100 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.

மொத்த சீர்திருத்தத்திற்கு அழைப்பு விடுப்பதில் அதன் விவரிப்பு போதுமானதாக இல்லை என்று ஷாரில் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset