நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ராணுவ வீரர்கள் அல்லாத குழுவை இந்தியா மாலத்தீவுக்கு அனுப்பியது

மாலி:

இந்திய ராணுவ வீரர்கள் வெளியேற மாலத்தீவில் எதிர்ப்பு கிளம்பி உள்ள  நிலையில், மாலத்தீவில் இந்தியா வழங்கிய ஹெலிகாப்டருக்கு பொறுப்பேற்க ராணுவம் அல்லாத குழுவை இந்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று மாலத்தீவு அதிபராகப் பதவியேற்றார் முஹம்மது மூயிஸ். 

மாலத்தீவுக்கு கடல் கண்காணிப்புக்காக அதிநவீன இலகுரக ஹெலிகாப்டர்கள், டார்னியர் சிறிய ரக விமானம் ஆகியவற்றை இந்திய வழங்கி பராமரித்து வருகிறோம் என்று கூறி பல ஆண்டுகளாக இந்திய இராணுவத்தினர் தங்கள் நாட்டில் தேவையில்லாமல் இருக்கிறார்கள் என்று அதிபர் முஹம்மது மூயிஸ் குற்றம் சாட்டினார்.

தான் வெற்றி பெற்றால் இந்திய இராணுவத்தை வெளியேற சொல்வேன் என்று தேர்தலில் உறுதி அளித்து தான் அவர் வெற்றி பெற்றார். 

மாலத்தீவில் தற்போது 88 இந்திய ராணுவ வீரர்கள்உள்ளனர். அந்த வீரர்களையும் மார்ச் 15குள் திரும்பப் பெறுமாறு அதிபர் மூயிஸ் இந்திய அரசிடம் வலியுறுத்தினார். இதனால் இந்தியா, மாலத்தீவு இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டது. 

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset