நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

செராஸில் அந்நியத் தொழிலாளர்களை ஏமாற்றிய நிறுவனம் மீது கடும் நடவடிக்கை

கோலாலம்பூர்:

செராஸில் அந்நியத் தொழிலாளர்களை ஏமாற்றிய நிறுவனம் மீது சட்ட ரீதியில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுதியோன், மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் ஆகியோர் கூட்டாக இதனை தெரிவித்தனர்.

செராஸில் உள்ள நிறுவனம் 94 வங்காளதேச தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியது.

ஆனால், அந்த நிறுவனம் அவர்களுக்கு வேலை வழங்கத் தவறியதற்கு  சட்ட ரீதியான விளைவுகளை எதிர்கொள்ளும்.

கடந்த நவம்பரில் மலேசியாவிற்கு தொழிலாளர்களை அழைத்து வந்த நிறுவனம் அவர்களை கைவிட்டுள்ளது.

அவர்களுக்கு சரியான தங்குமிடத்தையோ போதுமான உணவையோ வழங்கவில்லை.

இதில் தொடர்புடைய முதலாளிகளுக்கு எதிராக இரு அமைச்சகங்களாலும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும்.

அந்நியத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் எப்போதும் அவர்களின் நலனைக் கவனித்துக் கொள்ள வேண்டும்.

அவர்கள் தேசிய சட்டங்களை பின்பற்றி நடப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அவர்கள் கூறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset