நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பட்டப்பகலில் இந்திய ஆடவர் வெட்டிக் கொலை: கூலிம் நகரில் பரபரப்பு

கூலிம்: 

பாடாங் செராய், தாமான் டாமாயில் உள்ள காபி கடையில் கூரிய ஆயுதங்களால் வெட்டப்பட்ட இந்திய ஆடவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

இச் சம்பவம் நேற்று மதியம் 1.20 மணியளவில் நிகழ்ந்ததாகவும் மரணமடைந்த 27 வயதான அந்த இந்திய ஆடவரை அரிவாள், ஆயுதங்களைக் கொண்டு தாக்கியதாகக் கூலிம் மாவட்ட காவல்துறைத் தலைவர் சஃபுவான் நூர் தெரித்தார்.

"லாரி ஓட்டுநராகப் பணிபுரிந்த கொல்லப்பட்ட நபர், சந்தேக நபர்களால் துரத்தப்பட்டுள்ளார். தப்பி ஓடி, அருகிலிருந்த காபி கடைக்குள் நுழைந்த நிலையில், அவரை விடாமல் வெட்டி சாய்த்தனர். இதனால் அவர் சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே உயிரிழந்தார்" என அவர் மேலும் கூறினார்.

“கூரிய ஆயுதங்களைப் பயன்படுத்தித் தாக்கியதன் விளைவாகக் கொல்லப்பட்டவரின் கைகள், மார்பு, முதுகு மற்றும் முகத்தில் பலத்த காயங்கள் ஏற்பட்டன. பாதிக்கப்பட்டவரின் உடல், உடல்கூறு அறிக்கைக்காக அலோர் ஸ்டாரில் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது,”என்று அவர் ஓர் அறிக்கை வாயிலாகத் தெரிவித்தார்.

இந்தக் கொலை தொடர்பான விசாரணையும் சம்பந்தப்பட்ட இருவரைத் தேடும் நடவடிக்கையையும் காவல்துறை முன்னெடுத்துள்ளதையும் அறிக்கையில் காண முடிகின்றது.

"சம்பவத்தின் நோக்கம் இன்னும் கண்டறியப்படவில்லை. அதோடு இந்தச் சம்பவம் குற்றவியல் சட்டம் பிரிவு 302 இன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

இந்தத் தாக்குதல் குறித்துத் தகவல் தெரிந்தவர்கள் அஸ்மிருல் அப்துல்  அஜீஸை (Azmirul Abd Aziz) 019-4446521 என்ற எண்ணிலோ அல்லது கூலிம் மாவட்ட காவல்துறை தலைமையகத்தை 04-4906222 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றார்கள்.

- தயாளன் சண்முகம்

தொடர்புடைய செய்திகள்

+ - reset