நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்க செலவினங்கள் கண்காணிக்கப்படும்: மாமன்னர் சுல்தான் இப்ராஹிம்

கோலாலம்பூர்:

பொது நிதிகள் சரியான நோக்கங்களுக்காக செலவிடப்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து அரசாங்க செலவினங்களும் கண்காணிக்கப்படும்.

மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இதனை கூறினார்.

மலேசியாவின் வளர்ந்து வரும் கடன் தொகை ஏமாற்றமளிக்கிறது.

இது புத்ராஜெயா 1998இல் இருந்ததைவிட  பற்றாக்குறை நிலையில் இருப்பதே இதற்குக் காரணம்.

இந்தச் சுமை நம் பேரக் குழந்தைகளுக்குத்தான் பெரும் பாதிப்பை உண்டுபண்ணும் என்று மக்களைவையில் உரையாற்றிய மாமன்னர் கூறினார்.

பொது நிதியைச் சேமிக்கவும், இலக்கு மானியங்களைச் செயல்படுத்தவும் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளை நான் ஆதரிக்கிறேன்.

அரசாங்கத்தின் செலவினங்களையும் நான் கண்காணிப்பேன்.

ஒவ்வொரு முன்மொழியப்பட்ட செலவும் உண்மையில் அவசியம் என்பதை உறுதி செய்வேன். 

எனது ஆட்சியின் போது, ​​அரசாங்கம் ஒவ்வோர் ஆண்டும் நிதி உபரியை அடையும் என நம்புகிறேன் என்று சுல்தான் இப்ராஹிம் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset