நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

3,000 பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிக்கு போகலாம் உதவி நிதி: டாக்டர் வான் அஜிசா வழங்கினார்

கோலாலம்பூர்:

பண்டார் துன் ரசாக்கில் 3,000 பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் பள்ளிக்கு போகலாம் உதவி நிதி வழங்கப்பட்டது.

அதனை பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் வான் அஜிசா வான் இஸ்மாயில் வழங்கினார்.

2024ஆம் ஆண்டுக்கான பள்ளி தவனை வரும் மார்ச் 11ஆம் தேதி  தொடங்கவுள்ளது.

இதன் அடிப்படையில் இத்தொகுதியில் உள்ள 29 தொடக்க, இடைநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மொத்தம் 3,000 மாணவர்களுக்கு பள்ளிக்குத் திரும்பும் திட்டத்தின் கீழ் உதவிகள் வழங்கப்பட்டது.

இதில் 100 வெள்ளி மதிப்புள்ள பற்றுசீட்டும், 150 வெள்ளி அரசு ரொக்க உதவி நிதியும் வழங்கப்பட்டது.

மக்கள் வறுமையில் சிக்குவதைத் தடுக்க கல்வி ஒரு அரணாக உள்ளது. இதன் அடிப்படையில் தான் இந்த உதவிகள் வழங்கப்பட்டது என்று பிரதமரின் அரசியல் செயலாளர் அஸ்மான் அபிடின் கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset