நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கோலாலம்பூரில் உலக தங்க வணிகர்கள் மாநாடு 101 நாடுகள் பங்கேற்பு: டத்தோ அப்துல் ரசூல்

கோலாலம்பூர்:

உலக தங்க வணிகர்கள் மாநாட்டில் 101 நாடுகள் பங்கேற்கவுள்ளன என்று 
மலேசிய இந்தியர் பொற்கொல்லர் சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ரசூல் தெரிவித்தார்.

மலேசியாவில் முதல் முறையாக உலக தங்க வணிகர்கள் மாநாடு வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி புக்கிட் பிந்தாங் J.W. Marriott ஹோட்டலில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

தென்கிழக்கு ஆசியாவில் இந்த மாநாடு நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன்னர் உலக தங்க வணிகர்கள் மாநாட்டை அரபு நாடுகள் நடத்தி உள்ளன.

இம்முறை உலக தங்க வணிகர்கள் மாநாட்டை ஏற்று நடத்தும் வாய்ப்பு மலேசியாவுக்கு கிடைத்துள்ளது என்று அவர் சொன்னார்.

உலகின் பல்வேறு பாகங்களிலிருந்து 101 நாடுகளைச் சேர்ந்த தங்க வணிகர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள்.

தங்கத்தில் முதலீடு செய்தால் அதற்கு உத்தரவாதம் உள்ளது.

தங்க வணிகத்தில் புகழ் பெற்று விளங்கும் வணிகர்கள் இந்த மாநாட்டில் கலந்து கொள்வதால் மலேசிய தங்க வணிகர்கள் தங்களது வியாபாரத்தை உயர்த்திக் கொள்ள  இந்த மாநாடு பெரும் துணை புரியும் என்று அவர் சொன்னார்.

இந்த மாநாட்டில் பங்கேற்க விரும்பும் மலேசிய வணிகர்கள் 012-2031786 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset