நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ரஷிய போரில் இந்தியர்கள்: விடுவிக்க வலியுறுத்தல்

புது டெல்லி:

ரஷிய ராணுவத்தில் உதவியாளர்களாக பணியாற்றி வரும் இந்தியர்களை உடனடியாக விடுவிக்க இந்தியா  வலியுறுத்தியுள்ளது.

உக்ரைனில் போர் பகுதியிலிருந்து விலகியிருக்குமாறு இந்தியப் பணியாளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.

ரஷிய ராணுவத்தில் உதவியாளர்களாக உள்ள இந்தியர்களை தற்போது உக்ரைன் போர் பகுதியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் பணியாற்றி வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதுகுறித்து எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி, உக்ரைன் போர் பகுதியில் உயிருக்கு ஆபத்தான நிலையில் ரஷிய ராணுவத்தில் பணியாற்றி வரும் இந்திய பணியாளர்களை மீட்டு தாயகம் அழைத்துவர வெளியுறவு அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரண்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ரஷிய ராணுவத்தில் இந்தியர்கள் சிலர் துணைப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

அவர்களை விரைந்து விடுவிக்குமாறு சம்பந்தப்பட்ட ரஷிய அதிகாரிகளை அங்குள்ள இந்திய தூதரகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. உக்ரைன் போர் பகுதியிலிருந்து விலகி இருக்குமாறு அனைத்து இந்தியப் பணியாளர்களையும் வெளியுறவு அமைச்சகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது' என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset