நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ரிங்கிட்டின் மதிப்பு சரிவு அன்வார் மீதான  நம்பிக்கையை சிதைக்கிறது: மொஹைதின்

கோலாலம்பூர்: 

26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நாட்டின் நாணயச் சரிவு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கையை சிதைக்கிறது.

தாமதமான சீர்திருத்தங்கள், மிதமான வளர்ச்சியை உள்ளடக்கிய பொருளாதார அழுத்தங்களைக் குவிக்கிறது என்று முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் எச்சரித்தார்.

இப்போது இந்த சூழ்நிலையில் முக்கியமானது அரசாங்கத்தின் மீதான  நம்பிக்கையும் ஆகும்.

அரசாங்கம் கூறுவது போல் இது புவிசார் அரசியல் என்றால், மலேசியாவின் நாணயம் ஏன் மோசமான நிலையில் உள்ளது.

இது தொடர்பில் மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள் என்று அவர் கூறினார்.

2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அன்வார் பதவிக்கு வந்ததில் இருந்து, ரிங்கிட்டின் சமீபத்திய சரிவு, அவருக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த வாரம், டாலருக்கு எதிராக ரிங்கிட்டின் மதிப்பு 4.8 ஐ கடந்தது. இது ஆசிய நிதி நெருக்கடிக்குப் பின்னர் அதன் பலவீனமான நிலை என்றார் அவர்.

-பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset