நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பட்டினியில் மக்கள் வாடும் நிலையில் வானுயர் கட்டடங்கள் இருப்பதில் அர்த்தமில்லை: சுல்தான் நஸ்ரின்

ஈப்போ:

பட்டினியில் மக்கள் வாடும் நிலையில் வானுயர் கட்டடங்களுக்கு எந்தவொரு அர்த்தமும் இல்லை என்று பேரா சுல்தான், சுல்தான் நஸ்ரின் முய்சுதீன் ஷா கூறினார்.

பட்டினி, ரேஷன் சாப்பாடு, திறந்த வெளியில் உறக்கம் என்று மக்கள் இன்னும் இருந்தால் 'வானத்தை தொட்டு நிற்கும்' பிரம்மாண்டமான கட்டிடங்களை கட்டிக்கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

மக்களின் சமூக நல்வாழ்வை உத்தரவாதப்படுத்தும் குறிக்கோள்களில் ஒன்றான இத்தகைய வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

குறிப்பாக வறுமையை ஒழிப்பதற்கான முயற்சிகள் தொடர வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

வருமானத்தை அதிகரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது.

அதற்கு பதிலாக வலுவான சமூக பாதுகாப்பு, நல்ல சுகாதார சேவைகளை வழங்குவதன் மூலம் வாழ்க்கையின் தரம் உயரும்.

பேரா மாநிலத்தை முன்னேற்றும் முயற்சியில், மக்களின் நல்வாழ்வை வடிவமைக்கும் ஆரோக்கியத்தின் சமூக பாதுகாப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட வேண்டும் .

நல்ல ஆரோக்கியம் என்பது நோய் இல்லாதது மட்டுமல்ல, உடல், மன சமூக நல்வாழ்வை உள்ளடக்கியது.

15ஆவது பேரா மாநில சட்டமன்ற இரண்டாம் கூட்டத் தொடரை தொடக்கி வைத்த சுல்தான் நஸ்ரின் மேற்கண்டவாறு கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset