செய்திகள் வணிகம்
ஜப்பானுடன் ஹலால் வர்த்தகம், முதலீட்டை மலேசியா மேலும் வலுப்படுத்தும்: ஜாஹித்
ஒசாகா:
ஜப்பானுடன் ஹலால் வர்த்தகம், முதலீட்டை மலேசியா மேலும் வலுப்படுத்தும்.
இதன் அடிப்படையில் இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.
ஹலால் தொழிற்துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதையும் இந்த ஒத்துழைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஜப்பானில் மலேசிய ஹலால் தயாரிப்புகளை விளம்பரப்படுத்த ஹலால் மேம்பாட்டு வாரியம், ஏஇஓன் கோ ஆகியவற்றுக்கு இடையே முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
ஹலால் மேம்பாட்டு வாரியம் ஜப்பானில் உள்கட்டமைப்பு, ஹலால் சான்றிதழை மேம்படுத்த ஜப்பான் ஹலால் சங்கத்துடன் ஒத்துழைத்துள்ளது.
இந்த ஒத்துழைப்பு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தது.
மலேசியா, ஜப்பான் இடையே தொடர்ச்சியான தொழில் துறை ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் ஒரு புதிய அத்தியாயத்தை குறிக்கிறது.
குறிப்பாக இது சர்வதேச ஹலால் நடைமுறைகள், தரங்களை மேம்படுத்தும் என்று டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
December 4, 2024, 10:34 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி
November 28, 2024, 10:04 pm
Lalamove ஊழியர்கள் பயனடைய புதிய ஒப்பந்தம்
November 17, 2024, 5:44 pm
எந்த வயதிலும் ஒருவர் பிரபலமாகலாம்: அதற்கு மார்கரெட் சோலாவும் ஓர் உதாரணம்
October 9, 2024, 10:38 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
October 8, 2024, 10:05 am
அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
October 5, 2024, 3:31 pm