நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கடந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகள் 329.5 பில்லியன் ரிங்கிட்டாக பதிவு: பிரதமர்

கோலாலம்பூர்:

மலேசியா கடந்த ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகள் 329.5 பில்லியன் ரிங்கிட்டாக பதிவு செய்து சாதனை படைத்துள்ளது.

நிதி அமைச்சரான அன்வார், 2022ஆம் ஆண்டின் மொத்த 264.6 பில்லியன் ரிங்கிட்டை விட கடந்த ஆண்டு 23% அதிகம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

2023ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகள் 5,101 திட்டங்களை உள்ளடக்கியது.

இது 127,000க்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திறனைக் கொண்டுள்ளது.

168.4 ரிங்கிட் பில்லியனுடன் மொத்த அங்கீகரிக்கப்பட்ட முதலீடுகளில் பாதிக்கு மேல் (51.1%) சேவைத் துறை பங்களித்தது.

அதைத் தொடர்ந்து உற்பத்தித் துறை 152.0 பில்லியன் ரிங்கிட் (46.1%), முதன்மைத் தொழில் துறை 9.1 பில்லியன் ரிங்கிட் (2.8%)  ஆகும்.

மொத்தத்தில் வெளிநாட்டு முதலீடு 57.2% பங்களித்தது. உள்நாட்டு முதலீடு மீதமுள்ள 42.8% ஆகும்.

கடந்த ஆண்டு உள்நாட்டு முதலீடு, வெளிநாட்டு முதலீடு முறையே 35.1% மற்றும் 15.3% அதிகரித்துள்ளது என்றும் டத்தோஸ்ரீ அன்வார் கூறினார்.

முழு அரசாங்க அணுகுமுறையின் மூலம் செயல்படுத்தப்பட்ட முதலீட்டாளர் நட்பு, வணிக சார்பு கொள்கைகள் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பதில் பலனளிக்கத் தொடங்கியுள்ளன என்பதற்கு இது ஒரு அறிகுறியாகும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset