நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

நாட்டில் energy sticks சாதனங்களை நுகரும் பிள்ளைகள்: சுகாதார வல்லுநர்கள் கவலை

கோலாலம்பூர்:

நாட்டில்  சில பிள்ளைகள் புத்துணர்வு அளிப்பதாகக் கூறப்படும் energy sticks சாதனங்களை நுகர்வதாகத் தெரியவந்துள்ளது.

அதில் என்னென்ன பொருள்கள் இருக்கின்றன என்பது பற்றிய தெளிவான தகவல் இல்லை.

அது தடை செய்யப்பட வேண்டும் என்று சுகாதாரத் துறை வல்லுநர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.

திராட்சை, bubblegum போன்ற சுவைகளில் இணையத்தில் விற்கப்படும் அந்தச் சாதனம் பள்ளிப் பிள்ளைகளிடையே பிரபலமடைந்து வருவது கவலையளிப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

சுமார் 70 காசு முதல் 5 வெள்ளி வரை அந்தச் சாதனங்கள் விற்கப்படுகின்றன.

மின்-சிகரெட்டைப் போன்று energy stick சாதனமும் போதைப்பொருள் பயன்பாட்டுக்கு இட்டுச் செல்லக்கூடும் என்று சுகாதாரத் துறை வல்லுநர்கள் அஞ்சுகின்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset