நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

ரிங்கிட்டின் செயல்திறன் எதிர்கால வாய்ப்புகளை பிரதிபலிக்காது: பேங்க் நெகாரா கவர்னர்

கோலாலம்பூர்:

ரிங்கிட்டின் தற்போதைய நிலை எதிர்காலத்தில் மலேசியப் பொருளாதாரத்தின் சாதகமான வாய்ப்புகளைப் பிரதிபலிக்காது

பேங்க் நெகாரா கவர்னர் டத்தோ அப்துல் ரஷீத் கஃபார் இதனை கூறினார்.

மற்ற நாடுகளின் நாணயங்களைப் போலவே ரிங்கிட்டின் சமீபத்திய செயல்திறன்  ஒரு சில காரணங்களால் பாதிக்கப்படுகிறது.

அதனால் மாறிவரும் அமெரிக்க வட்டி விகித எதிர்பார்ப்புகளுக்கு சந்தை சரி செய்யப்படும்.

புவிசார் அரசியல் நிலைகள், சீனாவின் பொருளாதாரக் கண்ணோட்டம் தொடர்பான நிச்சயமற்ற தன்மை ஆகியவை அடங்கும்.

இந்த ஆண்டு வளர்ச்சியானது மேம்பட்ட வெளிப்புற தேவை, வலுவான உள்நாட்டு செலவினங்களால் உந்தப்படும் என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset