நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

டி.பி.என் 2.0 இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படும் 

புத்ரா ஜெயா :

டிபிஎன் 2.0 என்றழைக்கப்படும் மலேசியப் பயனீட்டாளர் திட்டவரைவு 2.0 இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படும். 

அதுமட்டுமல்லாமல், பிடிகே 2030 என்றழைப்படும் 2030-ஆம் ஆண்டு பயனீட்டாளர் செயல் திட்டமும் அறிமுகப்படுத்தப்படும் என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சர் டத்தோ அர்மிசான் முஹம்மத்  தெரிவித்துள்ளார்.  

இந்தக் கொள்கையானது மக்களின் பங்கேற்பு, சட்ட அமலாக்கம் மற்றும் நுகர்வோர் மதிப்புக் கல்வி ஆகிய மூன்று அடிப்படைகளை உள்ளடக்கியதாக இருக்கும் என்று அவர் கூறினார்.

முதல் டிபிஎன் 2002-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 

இரண்டு காலாண்டுக்குப் பிறகு, முந்தை டிபிஎனில் உள்ள கொள்கைகளை மேம்படுத்தி டிபிஎன் 2.0-யை அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் அமைச்சர் கூறினார். 

இந்தக் கொள்கை மூன்று முக்கிய கூறுகளை அடிப்படையாகக் கொண்டது. டிபிஎன் 2.0 ஓர் அரசாங்கக் கொள்கையாக மட்டும் இருக்கக்கூடாது. அனைத்துத் தரப்பையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றார் அவர். 

- அஸ்வினி செந்தாமரை 

தொடர்புடைய செய்திகள்

+ - reset