நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஃபிரன்சாய்ஸ் வர்த்தகத்தில் கால்பதிப்பவர்களுக்கு வழிகாட்டுகிறது பெர்னாஸ்: டத்தோ ரமணன்

கோலாலம்பூர்:

ஃபிரன்சாய்ஸ் வர்த்தகத்தில் கால்பதிப்பவர்களுக்கு பெர்னாஸ் தொடர்ந்து வழிகாட்டி வருகிறது.

இந்த வாய்ப்புகளை இந்திய சமுதாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ரமணன் கூறினார்.

பெர்னாஸ் எனப்படும் பெர்பாடானான் நேஷ்னல் பெர்ஹாட் கடந்த 1969ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

கடந்த 2000ஆம் ஆண்டு முதல் ஃபிரன்சாய்ஸ் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு பெர்னாஸ் உரிய வழிகாட்டல்களை வழங்கி வருகிறது.

குறிப்பாக பயிற்சிகள், நிதியுதவுகள் உட்பட அனைத்து உதவிகளையும் பெர்னாஸ் வழங்கி வருகிறது.

இதுவரை 5,590 தொழில் முனைவர்களை பெர்னாஸ் உருவாக்கி உள்ளது. 35ஆயிரம் வேலை வாய்ப்புகளை பெர்னாஸ் உருவாக்கி உள்ளது.

நாட்டில் முன்னணி ஃபிரன்சாய்ஸ் நிறுவனங்களும் பெர்னாஸுடன் இணைந்து செயல்படுகின்றன.

அவ்வகையில் இவ்வாண்டு மேலும் 5 ஆயிரம் ஃபிரன்சாய்ஸ் தொழில் முனைவர்களை உருவாக்க பெர்னாஸ் திட்டமிட்டுள்ளது.

ஃபிரன்சாய்ஸ் தொழில் துறையில் ஆர்வம் உள்ள இந்தியர்கள் இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டத்தோ ரமணன் கூறினார்.

ஃபிரன்சாய்ஸ் தொழில் துறையில் ஆர்வம் உள்ள எந்த சமூகமாக இருந்தாலும் அவர்களுக்கு வழிகாட்ட பெர்னாஸ் தயாராக உள்ளது.

இதில் எந்த பாகுபாடும் பார்க்கப்படாது என்று பெர்னாஸ் தலைவர் டத்தோ அஸிமா கூறினார்.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset