நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

எங்களிடம் எம்ஏசிசி விசாரணை மேற்கொள்ளவில்லை: மிர்சான், மொக்ஸானி

கோலாலம்பூர்:

முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீரின் இரு மகன்களான மிர்சானும் மொக்ஸானியும் தங்களிடம் எம்ஏசிசி விசாரணை மேற்கொள்ளவில்லை என்பதை உறுதிப்படுத்தினர்.

மிர்சானும் மொக்ஸானியும் தங்கள் சொத்து விபரங்களை முறையாகத் தெரிவிக்கவிருப்பதாக ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். 

சில ஊடகங்கள் மகாதீரின் இரு மகன்களிடம் எம்ஏசிசி விசாரணை மேற்கொண்டதாகச் செய்திகள் வெளியிட்ட நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் மிர்சானும் மொக்ஸானியும் அறிக்கை வெளியிட்டனர். 

எம்ஏசிசி சட்டம் 2009-இன் பிரிவு 23-இன் கீழ் குற்றம் செய்ததாக சந்தேகிக்கப்படும் நபரின் மகன் என்ற நோட்டிஸ் தங்களுக்குக் கிடைத்ததையும் அவர்கள் உறுதிப்படுத்தினர்.

இந்த முழு விசாரணையும் தங்களை வளப்படுத்த தங்கள் தந்தை பிரதமராக தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தாரா என்பது குறித்து எம்ஏசிசி தற்போது விசாரணை செய்து வருகின்றது. 

கடந்த வியாழன் அன்று, எம்ஏசிசி தலைமை ஆணையர் அசாம் பாக்கி, சொத்து அறிவிப்பு விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்படும் நபர்களில் மகாதீரும் இருப்பதை உறுதிப்படுத்தினார்.

இது மிர்சான் மற்றும் மொக்ஸானி மீதான சொத்து அறிவிப்பு நோட்டீஸ் விசாரணையுடன் தொடர்புடையது என்று அசாம் பாக்கி குறிப்பிட்டார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset